பட்டுப்புடவை என்று ஏமாற்றும் துணிக்கடைகள்

பட்டுப்புடவை என்று ஏமாற்றும் துணிக்கடைகள்: “பிராண்ட்” வியாபாரத்தில் கொள்ளையெடிக்கும் வியாபாரிகள் (1) “பிராண்ட்” வியாபாரம் செய்து கொள்ளையடிக்கும் பட்டு வியாபாரிகள்: வஸ்த்ரகலா, சாமுத்ரிகா, விவாஹா, சுபமுஹூர்த்த, வசுந்தரா, ஜடாவு, முஹூர்த்த, நகாசு, பிரைடல் செவன், இப்படி பெயர்கள் நீளுகின்றன. நல்ல வேளை, தமிழகப் பட்டுப் புடவைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை! பெண்களின் கூட்டமோ அதிகரிக்கின்றது. ஆனால், பாவம் அவர்கள் அருகில் சென்று விலையைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது – ரூ 3,000/- 3,500/-, 4,000/-, 5,000/- என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது! ஆகவே, சாதாரண மக்கள் பட்டுப்புடவை, அதிலும் உண்மையான வெள்ளி ஜரிகை வைத்து வாங்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, தலைப்பு, ஒருபக்க / சிங்கிள் பார்டர், இருபக்க / டபுள் பார்டர் என்றெல்லாம் பார்த்து ஏமாற வேண்டிய வேலையில்லை, அவசியமில்லை. புடவை முழுக்க டிஷைன் இருக்காது. உள்ளே மறைந்து விடும் என்பதால் மூன்றில் ஒருபகுதியில் டிஷைன் / ஜரிகை இருக்காது. ஆனால் முழுக்க உள்ளது போல புடவையை தலைப்புப் பக்கம் மட்டும் திருப்பி-திருப்பிக் காட்டுவார்கள். இழைகள் மாறியிருந்தால், விட்டிருந்தால், துருத்திக் கொண்டிருந்தால், அவையெல்லாம் “செகண்ட்ஸ்” என்று ஒப்புக்கொள்ளாமல், ஏதேதொ காரணம் காட்டி பேசுவார்கள், திசைத்திருப்புவார்கள். பருத்தி ஆடைகளை மறந்து பட்டிற்கு பறக்கும் இந்திய பெண்கள்: காந்தியடிகள் கதராடை வேண்டும் என்று, பருத்தியைத்தான் சர்க்காவில் நெய்ய வேண்டும் என்று சத்தியாகிரக போராட்டத்தில் அதையும் சேர்த்துக் கொண்டார். சுதேசிய இயக்கத்தின் சின்னமாக்கினார். ஆனால், இன்றோ, இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு, இந்த வியாபாரிகள் அயல்நாட்டு வியாபரிகளின் லாபத்தைப் பெருக்கி வருகிறார்கள். இழை, இழைத்திரிப்பு, நூல், சாயம், சுத்தகரிப்பு, நூற்பு என்ற பல நிலைகளில் இந்திரமயமாக்கி, இந்திய மக்களைக் கொன்று, அயல்நாட்டு வியாபாரிகளை, தொழிற்நுட்பங்களை ஊக்குவிக்கின்றனர். டிஷைன்கள் / வடிவமைப்புகள் என்று கணினிகளை உபயோகப் படுத்தி, மக்களின் வாழ்வாதரங்களை அழிக்கின்றனர். ஆராய்ச்சி என்ற பெயரில், பழங்கால சிற்பங்களில் / சிலைகளில் உள்ள வடிவமைப்புகளை காப்பியடித்து, மாற்றி அவற்றை தமதென்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். அதனால், புடவைய வாங்கும் உழைத்து சம்பாதிக்கும் மக்கள் அதற்கும் சேர்த்து காசு கொடுக்கிறார்கள். ரூ 40-50 லட்சங்களில் கூட புடவைகள் விற்கப்படுகின்றன: ரூ 40-50 லட்சங்களில் கூட புடவைகள் உள்ளன என்பதை விட, அதையும் வாங்க ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது, பட்டுப்புடவை வியாபாரம் நடக்கிறாதா அல்லது வேறு வியாபாரம் நடக்கிறதா என்ற சந்தேகமே வருகின்றது. அதாவது, ரூ 1,000/- அல்லது 2,000/-ற்கே வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைகள், கீழ்தட்டு மத்தியத்தர குடும்பத்தினர் தவிக்கும் போது, வீடு வாங்கும் விலையில் எப்படி பட்டுப்புடவையை வாங்குகிறார்கள்? அடுத்தாத்து அம்புஜங்களும், இந்தாத்து பட்டுகளும் ஏழைகளாக, சாதாரண மக்களாகி விட்டார்கள் போலும், ஆகையால், இப்பொழுதெல்லாம் வேறு ஜாதி / சாதி மக்கள் பட்டுப்புடவைகள் வாங்க ஆரம்பித்து விட்டனர் போலும். இதற்கு அப்படி லட்சங்கள் எங்கிருந்து வருகின்றன? நேர்மையற்ற பட்டுப்புடவை வியாபாரம்: முன்பு போல, இப்பொழுதெல்லாம் உண்மையான பட்டுப் புடவையோ, அதிலும் ஜரிகையுள்ள பட்டுப்புடவையோ கிடைப்பதில்லை. வெள்ளி ஜரிகைக்குப் பதிலாக போலி ஜரிகையை உபயோகப்படுத்துகிறார்கள். பட்டிற்குப் பதிலாக பளப்பளபான கோரைப்புற்களின் நார்களை சேர்த்து புடவைகளை உருவாக்குகிறார்கள். அப்பொழுதெல்லாம் “நாரப்பட்டு” என்று சொல்லியே விற்பார்கள், ஆனால், இப்பொழுது பெரிய கடைகளில் ஏசி போட்டு, லை போட்டு, குளிபானம் கொடுத்து, சொல்லாமல் ஏமாற்றி விற்கிறார்கள். விலை அதிகரிக்க நடிகைகளை வைத்து அதிரடி விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ரூ 500/- முதல் ரூ 5,000/- 10,000/- உயர்வாக விலைவைத்து விற்கிறார்கள். ஆயிரம் ரூபாய் புடவையை இரண்டாயியம் என்றும் விற்கிறார்கள். இதில் இடைத்தரகர்கள், கடைகளில் சாமர்த்தியமாகப் பேசி விற்கும் கடையாட்கள் என பலருக்குக் கமிஷனும் கொடுக்கப் படுகிறது. உழவர் சந்தை போல, ஏன் நெசவாளி சந்தை இருக்கக் கூடாது? “உழவர் சந்தை” போல, ஏன் “நெசவாளி சந்தை” இருக்கக் கூடாது. ஒரு பட்டுப்புடவையை நெய்து முடிக்க ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் ஆகும், அதில் ஒன்றிற்கும் மேலாக பல தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள், இரவுப்பகலாக உழைத்து உருவாக்குவார்கள். ஆனால், அவர்களுக்கு, ஒரு புடவைக்கு ரூ 100/- முதல் 10,000/- கிடைக்கும் என்ற நிலையுள்ள போது, வியாபாரி எப்படி ரூ 500/- முதல் ரூ 20,000/- வரை லாபமடைகிறார்? முன்பு போல, வியாபாரி வீட்டிற்கே வந்து வியாபாரம் செய்தால், விலை குறையதா? பிறகு ஏன் அத்தகைய இந்திய கலாச்சார, பாரம்பரிய, நாகரிகம் மிக்க வியாபாரமுறையைக் கொன்றுவிட்டனர்? 50-100 வருடங்களுக்கு முன்பான பட்டுப்புடவை வியாபாரம்: எனது பாட்டிக் காலத்திலிருந்து பட்டுப் புடவைகளை பெண்கள் வாங்குவதைப் பார்த்திருக்கின்றேன். பொதுவாக திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தான் பட்டுப்புடவைகள் பிரத்யேகமாக வாங்குவார்கள். பட்டுப்புடவை விற்பவர் வீட்டிற்கே மூட்டையோடு வந்து, ஜமக்காளம் போட்டு அனைவரும் உட்கார, புடவைகளைப் பிரித்துக் காட்டி, பேரம் பேசி, ஒரு வழியாக வாங்கி முடிப்பார்கள். அதற்குள் புடவைகள் எல்லாவிதமான “தரநிர்ணய” சோதனைகளுக்கு உட்பட்டுவிடும். அதாவது, அனுபவம் மிக்க பெண்களே அத்தகைய சோதனைகள் செய்து முடித்து விடுவார்கள். நூல், சரிகை, தரிப்பிழைகள், கோடுகள், அழுக்கு, சாயம் பூசப்பட்டது, என அலசி பார்த்து விடுவார்கள். வியாபாரி ஒன்றும் செய்ய முடியாது. பெண்களும் அத்தகைய புடவைகளை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், இப்பொழுதோ போலிப்பட்டுப் புடவையை கண்டு பிடிக்க ஒரு எந்திரத்தை வைத்துள்ளார்களாம். அதில் சோதனை செய்ய ரூ 50/- ரூபாயாம்! நன்றி: வேதபிரகாஷ் 08-10-2011