சீனாவிலிருந்து பட்டு நூல் இறக்குமதி

சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பட்டு நூல் இறக்குமதியை நிரந்தரமாக தடை செய்யமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், உடுமலை, கோபி,பழநி, ஓசூர், தென்காசி, சேலம்,தேனி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில்,பட்டுக்கூடு வளர்ப்பு அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக தரமுள்ள வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தியில், உடுமலை முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும், இரண்டு டன்வெண்பட்டுக் கூடுகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு கொள்முதல்மையத்திற்கும், கர்நாடகாவிற்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்தி தவிர, சீனாவிலிருந்தும் பட்டு நூல் இறக்குமதி செய்யப்படுகிறது. சீன இறக்குமதியால் உள்நாட்டில் பட்டுக்கூடுஉற்பத்தி செய்வோருக்கு, போதிய விலை கிடைக்கவில்லை. இதைகருத்தில் கொண்ட மத்திய அரசு, இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்தாண்டு விதித்தது. அதனால், இறக்குமதி குறைந்து,உள்நாட்டில் உற்பத்தியாகும் கூடுகளுக்குநல்ல விலை கிடைக்கிறது;சராசரியாக கிலோ 250 ரூபாய்க்குவிற்ற கூடுகள், 400 ரூபாய் வரைஉயர்ந்துள்ளன. ஓராண்டாக இதற்குநிலையான விலை கிடைக்கிறது. இந்நிலையில், இறக்குமதியால்பயனடைந்த பட்டுத் துணி உற்பத்தியாளர்கள், 'கட்டுப்பாடுகளைக்குறைத்து சீனாவில் இருந்து பட்டுநூல் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,
'இறக்குமதியை அதிகரித்தால், மீண்டும் விலை சரிந்துதொழில் பாதிக்கப்படும்; எனவே,இறக்குமதியை முற்றிலுமாக தடைசெய்ய வேண்டும்' என, பட்டுக்கூடுஉற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உடுமலை பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
பட்டுக் கூடுகளுக்கு, 350ரூபாய்க்கு அதிகமாக விலை இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்.மற்ற பயிர் சாகுபடிகளைகைவிட்டு, மல்பெரி பயிரிட்டு பட்டுக்கூடுகளை வளர்க்கிறோம்.
சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரித்தால்,உள்நாட்டில் பட்டுக்கூடுகளின்விலையை, பட்டுத்துணி உற்பத்தியாளர்கள் வெகுவாகக் குறைத்து விடுவர். எனவே,
பட்டுநூல் இறக்குமதியை நிரந்தரமாகதடை செய்ய வேண்டும்.
பட்டுக்கூடு உற்பத்தி தொழில் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு, கச்சா பட்டு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்' என, பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் பட்டுத்துணிகள் உற்பத்திக்கு, ஆண்டுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கச்சா பட்டுக்கு தேவையுள்ளது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி 19 ஆயிரம் டன்னாக இருப்பதால், 11 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா பட்டு பற்றாக்குறையை தவிர்க்க, பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த 2001-02ம் ஆண்டில், குறைந்த வரி விதிப்பில் சீனாவிலிருந்து 9,258 மெட்ரிக் டன் கச்சா பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், உள்நாட்டு பட்டுக்கூடுகளின் விலை, கிலோ 90 ரூபாய்க்கும், கச்சா பட்டு கிலோ 800 ரூபாய்க்கும் சரிந்தது; உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலத்தில், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மல்பெரி செடிகளை அழிக்க வேண்டிய நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதனால், 2003ல் கட்டுப்பாடு இல்லாமல், இந்தியாவிற்கு கச்சா பட்டு இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வணிகவரி துறை அமைச்சகம் மூலம், இறக்குமதிக்கான வரிகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.
இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த வரிவிதிப்பு, 2008ம் ஆண்டு வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்ததால்,

உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் மற்றும் கச்சா பட்டிற்கு நல்ல விலை கிடைத்தது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்தது. தமிழகத்தில் கோபி, உடுமலை, தர்மபுரி, சேலம் உட்பட பகுதிகளில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கரில், மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து, சில மாதங்களாக வெண்பட்டுக் கூடுகளின் விலை, கிலோ 400 ரூபாயை தாண்டியது. இந்நிலையில், பட்டுத்துணிகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நெசவாளர்கள், கச்சாப்பட்டு மற்றும் பட்டு நூலிழை விலையை குறைக்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய அரசுக்கு கோரிக்கை அளித்தனர். 3,000 மெட்ரிக் டன் கச்சா பட்டை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். உடுமலை பகுதி பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
"நெசவாளர்கள் எனப்படும் பெரிய தொழிலதிபர்களின் லாபத்திற்காக கட்டுப்பாடு இல்லாமல் கச்சா பட்டை இறக்குமதி செய்தால்,
பட்டுக்கூடு உற்பத்தி தொழிலை நம்பியுள்ள விவசாயிகள்,
ரீலர்கள், டிவிஸ்டர்கள், டையிங் மற்றும் பிரின்டிங் தொழிலில் ஈடுபடுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே,
சீனாவிலிருந்து கச்சா பட்டு இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும.
நன்றி:தினமலர்



StateMarketVariety July-2012July- 2011
Qty.
(M.T)
Min.Max.Avg.Qty.
(M.T)
Min.Max.Avg.
KarnatakaRamanagaramBivoltine Hybrids153.525205415312 184.247121301202
Imp. Cross Breed678.721150335 254976.339100249168
SiddalghattaImp. Cross Breed1198.170170 3362591327.544130257191
KolarImp. Cross Breed--241.22115221170
Tamil nadu*Dharmapuri Bivoltine Hybrids2.60246311267 2.00160 254 207 
Imp. Cross Breed39.30176 265 227 64.20105205166
CoimbatoreImp. Cross Breed3.914520117417.10110197 153
Andhra Pradesh*HindupurImp. Cross Breed101.19105280225154.67105 210162
DharmavaramImp. Cross Breed19.588529523139.1771 215161
சீன பட்டு இறக்குமதியால் இந்திய பட்டு உற்பத்தி குறைந்து எதிர்காலத்தில் சீனாவை சார்ந்து இருக்கும் சூழல் உருவாகி உள்ளது

சீனபட்டு இறக்குமதி அறிவித்த சூழலில் சீன பட்டு ரூ 1400 லிருந்து ரூ 2600க்கு உயர்ந்துள்ளது
1 கிலோ சீனபட்டு நூல் $28 லிருந்து $54  ஆக உயந்துள்ளது.
இந்திய அந்நிய செலாவணி அதிகரிப்பதுடன் வரி வருவாய்  இழப்பு ஏற்ப்படுகிறது.
அதாயம் அடைவோர் யார்?
இந்திய பட்டுநூல் விலை இறங்கிய சூழலிலும் சீன பட்டுநூல் இறக்குமதியாவது இந்திய பட்டு வர்தகத்தை முடக்கும் செயலாகும்.
அப்பாவி விவசாயிகளின் உளைப்பையும்,முதலீட்டையும்  சுரண்டலாமா?
பட்டுவஸ்திர உற்ப்பத்தியாளர்கள்,ஏற்றுமதியாளர்கள்  உற்பத்தி செலவை நுகர்வோரிடம்
 ஈடு செய்ய முடியும் .விவசாயிகள்  நஸ்டத்தை ஈடு செய்ய முடியாது.
 ஓராண்டாக இதற்குநிலையான விலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் அதிகப்படியாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டன.நெசவாளர்களை பாதுகாக்க மாற்று சலுகைஅறிவிக்கலாம், அரசு பட்டு வளர்ச்சிதுறை அலுவலர்கள் உயர் ஊதியம் பெற்று வளமாக இருக்கும்போது, விவசாயிகளை பலிகடா ஆக்குவது நம்பிக்கை மோசடியாகும்.
 மீண்டும் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த மல்பெரி செடிகளை
அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டலாமா?
அரசு இதுகாறும் செலவிட்ட மாநியம் வீணாகலாமா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=192585
http://www.dinamalar.com/district_detail.asp?id=194669
http://mdmk.org.in/article/jan10/silk-industry-woes